Sacrament

அருளடையாளங்கள்
கிறித்துவின் இறப்பு, உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைநிகழ்ச்சி வழியாக இறைவனின் அன்பை
வெளிப்படுத்துவதும், உயிரோட்டமான அன்பு உறவை ஏற்படுத்தி மூவொரு கடவுளின் அருளை இறைமக்களுக்கு வழங்குவதுமே அருளடையாளங்கள்.

1. திருமுழுக்கு
கிறித்தவ வாழ்வின் நுழைவாயில். இறைவனுக்கும் மனிதருக்குமிடையே அன்புறவைத் தொடங்கி வைக்கும் முதல் அருளடையாளம். நீரினாலும், தூய ஆவியினாலும் புதுப்பிறப்பு அளித்து, நம்மை கடவுளின் பிள்ளைகளாக்கி, கிறித்துவின் மறையுடலாம் திருச்சபையின் ஓர் உறுப்பினராக நம்மை
அங்கீகரிக்கும் அருளடையாளம்.

குறிப்பு :

  • திருமுழுக்குச் சடங்கில் பெற்றோர், ஞானப்பெற்றோர் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆகவே குழந்தையைப் பெற்ற தாய் கோவிலுக்கு வரக்கூடிய உடல் நிலையைப் பெற்றதும் திருமுழுக்கை வைத்துக் கொள்வது நல்லது.
  • தம் குழந்தைக்கு திருமுழுக்கு கேட்கும் பெற்றோர் குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே பங்குத்தந்தையை அணுக வேண்டும்.
  • நமது பங்கிலேயே குழந்தைக்குத் திருமுழுக்கு பெறுவது முறை. பிற பங்கில் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படின் பங்குத்தந்தையின் சான்று தேவை. குழந்தையின் பெயரை தேர்வு செய்யும் போது சினிமா நட்சத்திரங்களின் பெயரையோ அல்லது அர்த்தமற்ற வினோதமான பெயர்களைத் தவிர்த்து, புனிதர்கள் அல்லது கிறித்தவ விசுவாசத்தை உணர்த்தும் பெயர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. நீண்டபெயர்களை தவிர்ப்பதும் சிறந்தது.
  • ஞானப்பெற்றோர் நல்ல கத்தோலிக்க கிறித்தவர் களாகவும், எடுத்துக்காட்டான குடும்பவாழ்வு வாழ்பவர் களாகவும், திருமுழுக்கு, நற்கருணை, உறுதிபூசுதல் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • திருமுழுக்கின் போது குழந்தை வெண்ணிற ஆடை அணிந்திருத்தல் வேண்டும். பெற்றோர்களும், ஞானப்பெற்றோரும் முன்கூட்டியோர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வேண்டும்.
  • மரண ஆபத்து நேரத்தில் எவரும், தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன் எனச்சொல்லி திருமுழுக்குக் கொடுக்கலாம். பின்பு உடனே அதை பங்குத்தந்தையிடம் தெரிவிக்க வேண்டும்.திருமுழுக்கு ஓர் சமூகக் கொண்டாட்டம், எனவே நம் பங்கில் மாதத்தின் முதல் ஞாயிறு திருப்பலியில் மட்டும் திருமுழுக்குக் கொடுக்கப்படும். திருப்பலிக்குப் புறம்பே திருமுழுக்குக்
    கொடுக்கப்படமாட்டாது.

2. நற்கருணை :

திருமுழுக்கில் பெற்ற இறை-மனித நல்லுறவை ஊட்டி வளர்க்கும் அருளடையாளம். பாவக்கறை அகற்றி இறைத்தந்தையின் மன்னிப்பைப் பெற்று துன்ப வாழ்வில் புத்துயிர் ஊட்டுகின்றது. அருளால் நிரப்பி மீட்பை நமக்குக் கொடையாகப் பெற்றுத்தருகிறது. ஏனெனில் என் உடலை உண்டு இரத்தத்தைக்
குடிப்பவன் என்றுமே வாழ்வான் என இயேசு கூறியுள்ளார்.
 

குறிப்பு :

  • நற்கருணை நமது அன்றாட உணவு. எனவே தினமும் இந்தக்கொண்டாட்டத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ பங்கெடுக்கலாம். தூய்மையான உள்ளத்தோடு பங்கெடுப்பது அவசியம்.
  • குடும்பத்தில் நோயுற்றோர், முதியோர்களுக்கு மாதத்தின் முதல் வெள்ளியன்று வீடுகளில் நற்கருணை வழங்கப்படும்.
  • எல்லா ஞாயிறு மற்றும் கடன் திருநாட்களில் முழுத்திருப்பலியில் பங்கெடுத்து நற்கருணை உட்கொள்ள வேண்டும். –
  • முதன் முறையாக நற்கருணை (புதுநன்மை ) பெற விரும்புவோருக்கு 9 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுவாக திருவிழாவின்போது முறையான தயாரிப்புக்குப் பின் புதுநன்மை வழங்கப்படும். தனியாகவோ மற்ற நாட்களிலோ புதுநன்மை பெற விரும்புவதைத் தவிர்க்கவும்.

3. உறுதிபூசுதல் :
திருமுழுக்கில் எழுந்த உறவை உறுதிப்படுத்தும் அருளடையாளம். இறைவனோடு கொண்ட உறவை பிறரோடு பகிர்ந்து வாழவும், திருத்தூதர்களைப் போன்று நற்செய்தி அறிவிக்கவும், தூய ஆவியார் நம்மில் பொழியப்படுகிறார்.

குறிப்பு :

  • 3 வாதுவாக மறைமாவட்ட ஆயர் பங்கு சந்திப்புக்கா ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்போது 12வயது நிரம்பியவர் களுக்கு, தகுந்த தயாரிப்புக்குப்பின் உறுதிபூசுதல் வழங்கப்படும்.
  • பெரியவர்களுக்கு திருமுழுக்கு வழங்கப்படும் போது நற்கருணை, உறுதிபூசுதல் ஆகிய இரண்டும் சேர்த்துக்கொடுக்கப்படும்.

4. ஒப்புரவு :
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுகிறவர்கள் இறைவனுக்கு எதிராக செய்த பாவங்களுக்கு அவரது இரக்கத்தால் மன்னிப்புப் பெறுகிறார்கள். அத்தோடு அவர்களின் பாவங்களால் புண்பட்டதும், தனது அன்பாலும் – மாதிரியாலும், மன்றாட்டாலும் அவர்களின் மனந் திரும்புதலுக்கு உழைப்பதுமான
திருச்சபையோடு ஒப்புரவாகிறார்கள்.

குறிப்பு :

  • ஆண்டுக்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை உட்கொள்ள வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.
  • ஆன்மீக வாழ்வில் வளர அடிக்கடி இந்த அருளடையாளத்தைப் பெறலாம்.

5. திருமணம் :
திருமணம் புனிதமானது. இந்த அருளடையாளத்தின் மூலம் மணமக்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்வதற்கும், தங்களையே மீட்டுக்கொள்வதற்கும், தங்களின் குழந்தைகளை அவ்விதமே வழிநடத்துவதற்கும், தங்களின் செயல் ஒவ்வொன்றையும் மீட்பளிக்கும் கருவியாகப் புனிதப்படுத்திக் கொள்வதற்கும் தேவையான அருளையும் பெற்றுக்கொள்கின்றனர்.
குறிப்பு : -

  • திருமணம் செய்ய மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18வயதும் நிரம்பியிருக்க வேண்டும். எவ்வித வற்புறுத்தலோ, கட்டாயமோ, நிர்ப்பந்தமோ கண்டிப்பாகக் கூடாது.
  • திருமண நாளை முடிவு செய்யும் முன் பங்குத்தந்தையின் அனுமதி வேண்டும்.
  • திருமண ஓலை எழுத வரும்போது திருமுழுக்கு மற்றும் திருமண தயாரிப்புச் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். திருமண நாளுக்கு முன்வரும் மூன்று ஞாயிறு திருப்பலியில் திருமண ஓலைகள் வாசிக்கப்படும்.
  • அறிவிக்கப்பட்ட ஓலையில் ஏதேனும் தடங்கல் இருப்பின் பங் குத்தந்தையிடம் தெரிவிக்க வேண்டிய து ஒவ்வொருவரின் கடமை.

6. குருத்துவம் :
ஒரு குடும்பத்திற்கு இறைவன் அளிக்கும் மேலான நன்கொடை குருத்துவம். இறையாட்சிப் பணிக்காக தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலைத்த உறவை உருவாக்குவதும், மக்களின் நல்வாழ்வுக்காக இயேசுவைப் போல முழுநேரமும் உழைக்கின்ற
உன்னதமான பணி குருத்துவப்பணி.

குறிப்பு:

  • குருக்களுக்காகவும், இறையழைத்தலுக்காகவும் தொடர்ந்து செபிக்க வேண்டும்.
  • குருக்களோடு இணைந்து, உற்சாகப்படுத்தி, உரமூட்டிப் பணியபுரிவது வளர்ச்சியின் அறிகுறி.
  • குடும்பங்களில் இளையோரை இறையழைத்தலுக்காக உற்சாகப்படுத்த வேண்டும்.

7. நோயில் பூசுதல் :
நோயுற்றோர், முதியோர் தம் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று, இறை உறவைப் புதுப்பித்து, திருப்பூசுதலாலும், நற்கருணையாலும் குணம் பெறுவது தான் நோயில் பூசுதல் அருளடையாளம்.

குறிப்பு :

  • கடின நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த அருளடையாளத்தைப் பெறலாம். ஒருமுறையல்ல, எத்தனை முறை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
  • குடும்பத்தில் நோயுற்றோ, மருத்துவமனையிலோ இருந்தால் உடனடியாகப்பாங்குத்தந்தையிடம் தெரிவிக்க வேண்டும்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்

1. பங்கு அருட்பணிப் பேரவை –

2. பங்கு நிதிக்குழு

  • No Upcoming Events